dinamalar telegram
Advertisement

ரேஷன் கடை செயல்பாடு எப்படி? கார்டுதாரர்களிடம் விசாரிக்க உத்தரவு!

Share
சென்னை--ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு செல்லும் முன், அந்த கடைக்கு உரிய ரேஷன் கார்டுதாரர்களை சந்தித்து, கடையின் செயல்பாடு குறித்தும், பொருட்கள் வினியோகம் குறித்தும் கேட்கும்படி, அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரியான அளவில் தரமாக கிடைப்பதை உறுதி செய்ய, கலெக்டர்கள், உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் மாதந்தோறும் ஆய்வு செய்ய, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆய்வில் ஈடுபடும்போது, அதிகாரிகள் மேற் கொள்ள வேண்டிய வழிமுறைகளை, உணவு வழங்கல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:


 ரேஷன் கடையின் தகவல் பலகையில், கடையின் பெயர், பணி நேரம், ஊழியர் பெயர் ஆகியவற்றுடன் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, விலை, வினியோகம் பற்றிய விபரங்கள் எழுதப்பட்டு உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்


 உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் போது, தரம் குறைவான பொருட்கள் இருந்தால், அவற்றை உடனே கிடங்குகளுக்கு அனுப்பி, தரமான பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் பொருட்கள் இருப்பை சரிபார்த்து இருப்பு குறைவு அதிகம் இருந்தால், ஊழியர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

 அதிகாரிகள் ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய செல்லும் முன், அந்த கடையின் கார்டுதாரர்கள் இணைக்கப்பட்ட தெருவிற்கு சென்று குறைந்தது 10 கார்டுதாரர்களை சந்தித்து, அவர்களிடம் கடையின் செயல்பாடு குறித்து கருத்து கேட்க வேண்டும்

 அந்த கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள பொருட்களின் அளவு, நாள் ஆகியவற்றை குறித்து வந்து, கடையில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, போலி பட்டியல் போடப்பட்டு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  அப்படியே எட்டு மாத ஆட்சியின் செயல்பாடு எப்படின்னு.... கருத்து கேட்க உத்தரவு போடலாம்..... டூ இன் ஒன்...

 • Rajan -

  என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன். சர்க்கரை சில சமயங்களில் நன்றாக உள்ளது. சில சமயங்களில் பழுப்பு நிற சர்க்கரை தருகிறார்கள். சமயத்தில் கட்டி தட்டி தூசுகள் நிறைந்தவையாக இருக்கும். து.பருப்பு முதல் தரம் கிடையாது. சீக்கிரம் வேகாது. அரிசி உப்புமாவுக்கு சேர்த்துக்கலாம். என் கார்டுக்கு அரிசி கிடையாது. எனவே அரிசியின் தரம் தெரியாது. ஆனால் கடையில் வைத்துள்ள அரிசியை பார்த்தால் அவ்வளவு தரமாக இல்லை என்றே கூறலாம். ஊழியர்கள் பற்றி குறை சொல்லக் கூடாது. ஒவ்வொருவர் சுபாவம் ஒவ்வொரு மாதிரி. சிலர் எதாவது கேட்டால் பதில் கூற மாட்டார்கள். பிச்சையிடுவது போல் நடந்து கொள்வர். பெண் ஊழியர்கள் பாவம் சிரமப்படுகிறார்கள். அவர்களே பில் போடவேண்டும். அவர்களே மூட்டையை பிரித்து எடை போட்டு சுமையை தூக்கி பொருள் தருகிறார்கள். வெறும் எட்டாயிரம் சம்பளத்துக்கு நிறையவே உழைக்கிறார்கள். நடு நடுவே அதிகாரிகள் சோதனை என்று வருவர். இருப்பு Shortage ஆக காண்பித்தால் ஊழியர்தான் பொறுப்பு. கடைகளில் போதுமான இட வசதி இல்லை. வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. பெரும்பாலான கடைகள் மேடு பள்ளம் நிறைந்த இடத்தில் உள்ளன. கூரைகள் காரை பெயர்ந்து ஒழுகுகின்றன. நிறைய எலிப் பொந்துகள் உள்ளன. ரேசன் கடை வாசலில் சிதறி கிடக்கும் கோதுமை, அரிசி போன்றவற்றை சாப்பிட மாடுகள் போட்டி போட்டுக் கொண்டு பொருள்கள் வாங்க வருபவர்களுக்கு இடையூறு செயகின்றன. அவர்கள் சண்டையில் இரு சக்கர வாகனங்கள் கீழே விழுகின்றன. விசாலமான இடத்தில் தரமான கட்டிடத்தில் எலிகள் மாடுகள் தொல்லை இல்லாதவாறு ரேஷன் கடைகள் கட்ட முடியாதா. பொருள்கள் வாங்க வரிசையில் நிற்பவர்களை வெயில் மழையிலிருந்து காப்பாற்ற வசதி செய்து தர முடியாதா? ஆயிரம் கோடிகளில் கூவம் சுத்திகரிப்பு, பல ஆயிரம் கோடிகளில் தீம் பார்க், நூலகம், மணி மண்டபம், சமாதிகள், சிலைகள் வைக்க நிதி ஒதுக்கும் அரசு மக்களுக்கு வழங்கும் உணவுப் பண்டங்கள் தரமானதாகவும், அவைகளை ஆரோக்யமான முறையில் வைக்க மழையில் ஒழுகாத சுத்தமான சுகாதாரமான கட்டிடங்களை அமைக்க அரசு முன் வர வேண்டும். ஒவ்வொரு கடையும் ஒட்டடை படர்ந்து, தூசியாக உள்ளது. கார்டு SCAN செய்யும் கருவியில் ஒரே தூசி. இவைகளை எல்லாம் சரி செய்து ஆரோக்யமான சூழலை உண்டாக்க வேண்டும் அரசு.

 • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

  இவர்கள் சொல்லும் இந்த ரேஷன் கடை பட்டியல் ரோட்டில் தான் வைத்துள்ளனர். அதுவும் பழைய பேப்பர் காரர்கள் வாங்கி பிளாஸ்டிக் பொருள் தரும் பழைய தகரத்தில். கடைக்குள் சென்று பார்க்க கூட முடியாது. ஏனெனில் 10 க்கு 10 அறையில் மூட்டைகளை நிரப்பி வைத்துள்ளனர். இதில் எப்படி சரிபார்ப்பனர் என்று தெரியவில்லை. வாங்கும் கழித்தார் பொதுமக்களும் பிச்சைக்காரர்கள் கையேந்தி வீட்டு வாயில் முன் நிற்பது போல் ரேஷன் கடை படிக்கட்டில் வெய்யிலில் நின்று தான் வாங்க வேண்டும் அதுவும் குறைந்தது ஒருமணி நேரம் வெயிலில் நின்று பின். TASMAC கடைகளில் கூட கடையினுள் சென்று மது வாங்குகிறார்கள். ஆனால் ரேஷன் கடைகளில் ரோட்டில் நின்று தான் பொருள் வாங்க முடியும். பெரும்பாலான ரேஷன் கார்டுகளுக்கு வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தான் பொருட்கள் வாங்க வருகிறார்கள்.

 • பெரிதினும் பெரிது கேள் - Toronto,கனடா

  எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்காரர் மற்றும் எடையாளர் மிகவும் சிறப்பான சேவை செய்கிறார்கள் . சிறு சிறு குறைகள் தவிர மிகவும் அருமை ..வாழ்த்துக்கள் ....

 • R S BALA - CHENNAI,இந்தியா

  எதாவது நடக்கிறத பேசணும்.. சும்மா காமெடி பண்ணிக்கிட்டு..

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்