அமைச்சர் கைது?: கெஜ்ரிவால் வரவேற்பு
புதுடில்லி-டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்ய வரும் அமலாக்கத் துறையினரை வரவேற்பதாக முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:பஞ்சாப் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்யும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்வதாக தகவல் கிடைத்து உள்ளது.நாங்கள் தவறு செய்யவில்லை என்பதால் எவ்வித அச்சமும் இன்றி அவர்களை வரவேற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்து (14)
நீங்களும் பிஜேபி யம் ஒன்னு தானே ....
பூனைக்குரலோன் சூப்பரா முட்டு குடுக்குறாரு...
தவறு செய்தீர்களா அல்லவ என்பதை நீதி மன்றம் தான் முடிவு செய்யும். எந்த அரசியல் வாதியாவது ஊழல் செய்யம்மாள் யிருப்பதுண்டோ? இது காமராஜர் காலமெல்ல..
அப்ப சிதம்பரம் தவறு செய்தாரா. இல்லை . அவரைப்போல் தான் நீங்களும் , உங்கள் அமைச்சர்களும் மஹா உத்தம சிகாமணிகள் என்பது உலகுக்கே தெரியும்.
இப்படியாவது பஞ்சாப் கோவா தேர்தலுக்கு முன் நல்ல விளம்பரம் கிடைக்குமா என்ற எண்ணத்தில் தான் இந்த உளறல்