dinamalar telegram
Advertisement

தடுப்பூசி சான்றிதழுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் பேரணி

Share
Tamil News
ஹெல்சின்கி-'விமான நிலையம், விளையாட்டு நிகழ்வு உள்ளிட்ட பொது இடங்களுக்கு தடுப்பூசி சான்றிதழுடன் வர வேண்டும்' என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, ஐரோப்பிய நாடுகளில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.இதனால் உள்நாட்டு விமானங்கள், விளையாட்டு நிகழ்வுகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்கு, இன்று முதல் தடுப்பூசி சான்றிதழுடன் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அரசை எதிர்த்து, நேற்று முன்தினம் மக்கள் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஏதென்ஸ், ஹெல்சின்கி, லண்டன், பாரிஸ் மற்றும் ஸ்டாக்ஹோம் உள்ளிட்ட நகரங்களில் நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.ஸ்வீடன் நாட்டில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் உள்ளரங்க நிகழ்வுகளில் பங்கேற்க, தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்டாக்ஹோம் நகரில் 3,000க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர். அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோட்போர்க்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.பின்லாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன், பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. உணவகங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்க தடுப்பூசி சான்று அவசியம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹெல்சின்கியில் 4,000க்கும் மேற்பட்டோர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Visu Iyer - chennai,இந்தியா

    இந்தியாவில் இது போல வரு(ம்)மா

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    தடுப்பு ஊசி என்னும் ஏமாற்று வேலையை மக்கள் புரிந்துகொள்ள துவங்கி விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்