புதுச்சேரி : 'மாநிலத்தில் 75 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறி உள்ள நிலையில், குறைவான எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:கொரோனா காரணமாக வீட்டில் நிறைய பேர் முடங்கி உள்ளனர். சிகிச்சைக்காக தனியார், அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றனர்.நிறைய பேர் இன்னும் கொரோனா பரிசோதனை செய்யவில்லை. அவர்களும் பரிசோதனை செய்தால், பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியும். மாநிலத்தில் 75 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது.ஆனால் படிப்படியாக தொற்று பரிசோதனை குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு குறைவாக இருப்பதுபோல் காட்டுகின்றனர். கொரோனா பரிசோதனையை பரவலாக மேற்கொள்வதுடன், கிராமங்களுக்கு சென்று கூடுதல் பரிசோதனை செய்ய வேண்டும்.காங்., ஆட்சியில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி, முககவசம், சமூக இடைவெளியை கண்காணித்தோம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம்.இப்போது ஒன்றும் நடக்கவில்லை. கட்டுப்பாடு புத்தகத்தில் தான் உள்ளது. நடைமுறையில் இல்லை. யாரும் இதற்கு பொறுப்பு ஏற்பதில்லை.மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு, அவர்களை கொல்லுகின்ற அரசாக மாறிவிட்டது. இதற்கு கவர்னரும், முதல்வரும் எடுத்த தவறான நடவடிக்கையே காரணம் என கூறினேன். அவர்கள் இதுவரை அதற்கு பதிலளிக்கவில்லை. தங்கள் கடமையை மறந்து, மக்களை பகடைகாயாக்கி விட்டனர்.மாநிலம் தற்போது கொரோனாவால் தத்தளித்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜிப்மரில் முன் பதிவு செய்த பிறகே சிகிச்சைக்கு வரவேண்டும் என கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உத்தரவை ஜிப்மர் நிர்வாகம் ரத்து செய்து, அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!