ஆப்பரேஷன் பனிச் சிறுத்தை திட்டம் தொடர்கிறது: ராணுவ வடக்கு பிரிவு தளபதி அறிவிப்பு
உதம்பூர்-“லடாக் எல்லைப் பகுதியில் 'ஆப்பரேஷன் பனிச் சிறுத்தை' திட்டம் தொடர்கிறது,” என, இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி ஜோஷி தெரிவித்தார்.
எல்லை பிரச்னை காரணமாக 2020 முதல், நம் அண்டை நாடான சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது. பதற்றமான சூழல்கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இருநாட்டு வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சு நடந்து வருகிறது. எனினும், இதுவரை அதில் தீர்வு எட்டப்படவில்லை.
எல்லையில் இருந்து வீரர்களை திரும்பப் பெற சீனா மறுத்ததை தொடர்ந்து, ஆப்பரேஷன் பனிச் சிறுத்தை என்ற திட்டத்தை ராணுவத்தினர் வகுத்தனர். இந்த திட்டத்தின்கீழ், லடாக் எல்லையில் உள்ள பிரதான மலை உச்சிகளை ஆக்கிரமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த மலை உச்சிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வரு கின்றன.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதியான ஜோஷி பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பை நம் ராணுவத்தினர் உறுதிப்படுத்தி வருகின்றனர். எதிரிகளின் அத்துமீறல்களை நம் வீரர்கள் துணிச்சலுடன் முறியடித்து வருகின்றனர்.
சீன ஆக்கிரமிப்புலடாக் எல்லையில் உள்ள சீன ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. எனினும், ஆப்பரேஷன் பனிச் சிறுத்தை திட்டம் முடிவுக்கு வரவில்லை; தொடர்ந்து நீடிக்கிறது. நம் வீரர்கள் முழு எச்சரிக்கையுடன் எல்லையில் பணியாற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!