
நாட்டின் 73வது குடியரசு தினம் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டில்லி ராஜபாதையில் கண்கவர் பேரணி, அணிவகுப்பு நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பேரணி நடக்க உள்ளது.இந்நிலையில் குடியரசு தின பேரணியில் இடம் பெற உள்ள அம்சங்கள் பற்றிய விபரங்கள் தெரிய வந்துள்ளன.பேரணியில் பல்வேறு மாநிலங்கள், துறைகள், ராணுவப் படை பிரிவுகள் ஆகியவற்றின் 25 அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன. ராணுவம் சார்பில் பல்வேறு பீரங்கிகள் இடம் பெறுகின்றன.
'ஆகாஷ்' ஏவுகணை உட்பட பல்வேறு ஏவுகணைகளின் மாதிரி வடிவங்கள் பேரணியில் வலம் வர உள்ளன. அணி வகுப்பில் கடற்படை, விமானப்படை சார்பிலும் தலா ஒரு குழு பங்கேற்கிறது. இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையின் இரண்டு குழுக்களும், எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் பிரிவின் சார்பில் ஒரு குழுவும் பேரணியில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யவுள்ளனர். குடியரசு தின பேரணி, அணிவகுப்பு காலை 10:00 மணிக்கு துவங்கி பகல் 12:00 மணிக்கு முடியும். பேரணி துவங்குவதற்கு முன், டில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

வழக்கமான பாடல் ரத்து
குடியரசு தின விழா முடிந்த பின், ஆண்டு தோறும் ஜன., 29ல் ராணுவத்தினர் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான 'அபைடு வித் மீ' என்ற பாடலை, ராணுவத்தின் இசைக்குழுவினர் இசைத்தபின் இந்த நிகழ்ச்சி நிறைவு அடையும். ஆனால் இந்த ஆண்டு இந்த பாடல் நீக்கப்பட்டுள்ளது. கவிஞர் இக்பால் எழுதிய, 'சாரே ஜஹாம் சே அச்சா' என்ற பாடலை, இசைக்குழுவினர் இசைத்தபின் நிகழ்ச்சி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரை புகழ்வாராம்...திருக்குறள் சொல்வாராம்...என்னமா கூவியது அந்த வடக்கத்திய கும்பலின் கூட்டம். இதெல்லாம் மக்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம். இந்த போலி கும்பலை பற்றி தெரிந்துகொள்ள இதுபோன்று வெளியில் வந்து இந்த கும்பலை மக்கள் வெறுத்து ஒதுக்கவேண்டும்.