டிரைவர் தூங்கச் சென்றதால் காத்திருந்த ரயில் பயணியர்
ஷாஜகான்புர்-உத்தர பிரதேசத்தில் பயணியர் ரயிலின் டிரைவர், போதிய ஓய்வு கிடைக்காததால் துாங்கச் சென்றதால் பயணியர் இரண்டு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள பலாமாவில் இருந்து ஷாஜகான்புருக்கு பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 96 கி.மீ., தூரத்துக்கு இந்த ரயில் பயணிக்கிறது.சமீபத்தில் பலாமாவில் இருந்து மாலை 6:55க்கு புறப்பட்ட ரயில், இரவு 9:55க்கு ஷாஜகான்புரை அடைய வேண்டும். ஆனால் மூன்று மணி நேரம் தாமதமாக அந்த ரயில் ஷாஜகான்புரை அடைந்தது.
அங்கிருந்து காலை 7:00 மணிக்கு அந்த ரயில் மீண்டும் பலாமாவ் புறப்பட வேண்டும்.இரவில் தாமதமாக வந்ததால் போதிய ஓய்வு கிடைக்காததால், ரயில் டிரைவர் ஸ்டேஷனில் நன்றாக துாங்கி விட்டார். அதனால் காலை 9:00 மணிக்கு தான் அந்த ரயில் புறப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பயணியர் காத்திருக்க நேரிட்டுள்ளது.

வாசகர் கருத்து (15)
அனைவருக்கும் ஒய்வு தேவை ஓட்டுநர் செய்தது நன்று
நல்ல காலம் இறந்த மாதிரி தமிழ்நாட்டில் nadakavillai.
ஒய்வு இல்லாமல் ரயிலை இயக்கி விபத்தில் இறப்பதை விட தாமதமாக பயணம் செய்வது மேல். ஓட்டுனரும் மனிதர் தானே
தூக்க கலக்கத்தில் ரயில் ஒட்டி விபத்து நேர்ந்து பயணிகள் ஒரேயடியாக பரலோகம் போவதை காட்டிலும் , மூன்று மணிநேர தாமதம் என்றாலும் ஒழுங்காக வீடு போய் சேரமுடியும் தானே ? ஒய்வு மனிதனுக்கு மிக அவசியம் ......தங்கள் உயிர் பிழைத்து இருப்பதற்காக, அந்த ரயிலின் பயணிகள், ரயில் ஓட்டுனருக்கு நன்றி சொல்லவேண்டும் ..
நல்லதே அவரை குறை சொல்லி ஒன்னும் பண்ண முடியாது மனிதனின் இயல்பு