Load Image
Advertisement

14,547 கொரோனா நோயாளிகள் வீட்டுத்தனிமை! 137 இடங்களில் தொற்று பரவியிருக்கு

 14,547 கொரோனா நோயாளிகள் வீட்டுத்தனிமை! 137 இடங்களில் தொற்று பரவியிருக்கு
ADVERTISEMENT
கோவை:கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டோரில், 14 ஆயிரத்து, 547 பேர் வீட்டு தனிமையில் இருக்கின்றனர்.சில நாட்களாக, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. இம்மாத துவக்கத்தில், 75 ஆக இருந்தது; படிப்படியாக உயர்ந்தது. இப்போது, தினசரி பாதிப்பு, 3,000த்தை கடந்து விட்டது.


முதல் அலை மற்றும் இரண்டாவது அலை போல், தொற்று வீரியமாக இல்லை. காய்ச்சல், தொண்டை கரகரப்பு, உடல் மற்றும் மூட்டு வலி காணப்படுகிறது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மருந்து மாத்திரை உட்கொண்டால், காய்ச்சல் குணமாகி விடுகிறது. மூச்சுத்திணறல் பிரச்னை இல்லாததால், தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.அவ்வகையில், 91 சதவீதத்தினர், வீட்டிலேயே தனிமையில் இருக்கின்றனர். 9 சதவீதத்தினரே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இருப்பினும் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மற்றும் 'கோவிட் கேர் சென்டர்'களில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது, வீதிகளை முழுமையாக அடைக்கப்பட்டன; வீடுகளை சுற்றி தகரம் அடிக்கப்பட்டது. அதுபோன்ற நடைமுறைகள் தற்போது பின்பற்றப்படுவதில்லை. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகள், அதனை சுற்றியுள்ள வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுகின்றன. கோவை மாவட்ட அளவில், 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு குறைவாக இருப்போரை, 'கோவிட் கேர் சென்டர்' களிலும், பாதிப்பு அதிகமுள்ளோருக்கு அரசு மருத்துவமனை அல்லது நோயாளிகள் விருப்பத்துக்கேற்ப தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.தற்போது, கோவை மாவட்டத்தில், 15 ஆயிரத்து 926 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதில், 14, ஆயிரத்து, 547 பேர் வீட்டு தனிமையிலும், 1,379 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


'எந்த சூழலையும்எதிர்கொள்ள தயார்'

கலெக்டர் சமீரன் கூறியதாவது:கோவையில் கொரோனா சிகிச்சை அளிக்க, 14 ஆயிரத்து, 528 படுக்கைகள் தயாராக உள்ளன. இவற்றில், 13 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளன. தொற்று அதிகமுள்ள ரோடுகள் அல்லது வீடுகள் அதிகமுள்ள, 176 'மைக்ரோ கண்டெயின்மெண்ட் ஜோன்'கள் கண்டறியப்பட்டு, மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.கொரோனா பரிசோதனை மேற்கொள்வோரில், தொற்று கண்டறியப்படுவோர் சதவீதம், 19.1 என்ற அளவில் உள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரை காட்டிலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எந்த சூழலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.அன்னுார் தாலுகாவில் 2 தெருக்களுக்கு 'சீல்'சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கோவில்பாளையம் பேரூராட்சியில், நேற்று 20 பேருக்கு, தொற்று உறுதியானது. கோவில்பாளையம் பேரூராட்சி 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறியுள்ளது. கொண்டையம்பாளையம் ஊராட்சியில், 20 பேருக்கும், கீரணத்தம் ஊராட்சியில், 10 பேர் உட்பட எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், நேற்று 74 பேருக்கு தொற்று உறுதியானது.

கொண்டையம்பாளையம் ஊராட்சி, கோட்டை பாளையத்தில் ஒரே பகுதியில், 4 பேருக்கு தொற்று உறுதியானதால், அந்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டு, நடமாட தடை விதிக்கப்பட்டது.அன்னுார் பேரூராட்சியில், 20 பேருக்கும், கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம், காட்டம்பட்டி, மசக்கவுண்டன் செட்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், 39 பேருக்கும் தொற்று உறுதியானது. அன்னுார் - அவிநாசி ரோட்டில், ஒரே தெருவில், 4 பேருக்கு தொற்று உறுதியானதால். சீல் வைக்கப்பட்டு நடமாட தடை விதிக்கப்பட்டது. அன்னுார் தாலுகாவில் நேற்று, 133 பேருக்கு தொற்று உறுதி ஆனது. கடந்த ஆறு மாதங்களில் இதுவே அதிகபட்சபாதிப்பாகும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement