புதுடில்லி: நல்லாட்சி வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் பேசியதாவது: நல்லாட்சியில் மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. திட்டங்களை சிறந்த முறையில் அமல்படுத்தவும் உதவுகிறது. களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வது குறித்து விரிவான வழிமுறைகள் வெளியிடப்படும். ஒரு மாவட்டங்களின் வெற்றியில் இருந்து மற்ற மாவட்டங்கள் பாடம் கற்று கொள்வதுடன், தங்கள் முன் உள்ள சவால்களை மதிப்பீடு செய்ய வேண்டும். மேல்மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையிலும் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையிலும் அரசின் செயல்பாட்டை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும் பொது மக்களுக்கும் இடையே நேரடியான தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

மனம் வருத்தமடைகிறது , இதை பற்றி பேசினால் அரசியல் என்பார்கள் . அப்படியானால் பிரதமர் நம் தலைவர்களை பற்றி பேசுவது யாரோ எழுதி கொடுத்து பேசுவது போலத்தான் தெரிகிறது . இது திட்டமிட்ட காரணமோ இல்லை நிர்வாக காரணமோ தெரியவில்லை , கட்டுரையாளர் சொன்னது போல முக்கியமான குடியரசு நாளில் இந்திய எல்லைகளை ஒட்டிய மாநிலங்களின் ஊர்திகள் சென்றால் நன்மைதானே கிடைக்கும்