கோவை:கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ள அ.தி.மு.க.,வினரிடம், முன்னாள் அமைச்சர் வேலுமணி நேற்று நேர்காணல் நடத்தினார்.
கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினரிடம் ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டிருந்தது. அவை, தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது.சிங்காநல்லுார் தொகுதிக்குள், 22 வார்டுகள் வருகின்றன. அதில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம், அ.தி.மு.க., அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது.எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஜெயராம் ஆகியோர் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, நேர்காணல் நடத்தினார். விருப்ப மனு கொடுத்தவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து, தனித்தனியாக விசாரித்தார்.
அப்போது, 'உங்களது வார்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றனர். எத்தனை பூத் இருக்கிறது; எந்தெந்த சமூகத்தினர் இருக்கின்றனர்; எந்த சமூகத்தினர் அதிகமாக வசிக்கிறார்கள்.கட்சி சார்பில் வார்டுக்குள் நீங்கள் செய்த வேலைகள், சேவைகள் என்னென்ன, உங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, தேர்தலில் வாய்ப்பு கொடுத்தால், எவ்வளவு செலவழிக்க முடியும்' என, கேள்விகள் எழுப்பி, பதில் பெறப்பட்டது.
இறுதியாக, 'யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அவர்களை ஏற்று, தேர்தல் பணியாற்ற வேண்டும்' என, வேலுமணி அறிவுரை வழங்கினார்.
கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடக்கிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!