நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் மெயின்ரோடு வரசித்தி விநாயகர் கோவில் அருகே 10 நாட்களுக்கு முன் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
குடிநீர் சப்ளை செய்யும் போது கழிவுநீரும் சேர்ந்து வருவதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.நகராட்சி மூலம் வழங்கும் குடிநீரையே மக்கள் நம்பியுள்ளனர். நகராட்சி அதிகாரிகள் வெளியூரில் இருந்து பணிக்கு வருவதால் மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவது பற்றி தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உடைந்த சிமண்ட் குழாயை சரி செய்தனர். நேற்று காலை குடிநீர் சப்ளை துவங்கியவுடன் அதே இடத்தில் மீண்டும் உடைந்து சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் குடிநீர் சப்ளை சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டது. உடைந்த குழாயை முறையாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!