dinamalar telegram
Advertisement

மஸ்ட் : சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் குறித்து அந்தந்த காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிப்பது அவசியம்

Share
திருப்புவனம்-திருப்புவனம் வட்டாரத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் கைதிகள் குறித்த விவரம் தெரியாததால் அவர்களை கண்காணிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை,ஜாமினில் வெளிவரும் கைதிகள் குறித்து சிறை நிர்வாகம் அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு தகவல் தருவது வழக்கம். உரிய ஒருங்கிணைப்பு இல்லாததால் சிறை நிர்வாகத்தில் இருந்து தகவல் தருவதில்லை. சிறையில் இருந்து வெளி வரும் கைதிகளை போலீசார் கண்காணிக்க முடிவதில்லை.

திருப்புவனத்தில் கடந்த வாரம் வைகை ஆற்றில் எரித்து கொல்லப்பட்டவர் விபரம் தெரியவில்லை. விசாரணையில் திருப்புவனம் பேட்டைதெரு குமார் மகன் பாலாஜி என்றும் சிறையில் இருந்து வெளிவந்த அன்றே கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. போலீசார் பாலாஜி சிறையில் இருப்பதாகவே நினைத்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே சிறையில் இருந்து வெளியானது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் சிறையில் இருந்து வெளிவருபவர்கள் பற்றிய எந்த விபரமும் தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அந்தந்த பகுதி காவல்நிலையங்களுக்கு தகவல் கிடைத்தால் ரோந்து பணியின் போது சம்பந்தப்பட்ட குற்றவாளி வீட்டில் இருக்கிறாரா இல்லையா என போலீசார் கண்காணிக்க முடியும். எனவே தமிழக அரசு சிறைத்துறைக்கும் காவல்துறைக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement