சிவகங்கை: சிவகங்கையில் ரூ.24 லட்சத்தில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்ட 'நம்ம டாய்லெட்' செயல்பாடின்றி முடங்கியது.
சிவகங்கை நகராட்சியில் தலா ரூ.12 லட்சம் செலவில் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரேயும், குறவர் காலனி அருகேயும் 'நம்ம டாய்லெட்' 2015 ல் கட்டப்பட்டது. ஒரு டாய்லெட்டில் 3 ஆண், 2 பெண், ஒரு மாற்றுத்திறனாளி என தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டது. சிவகங்கை மஜீத்ரோடு, கலெக்டர் அலுவலகம் செல்வோருக்கு ஏற்ற வகையில் குறவர் காலனியில் கட்டினர். அதேபோன்று சிவகங்கை பஸ் ஸ்டாண்ட், தொண்டி ரோட்டில் செல்லும் மக்கள் பயன் பெறும் விதத்தில் பஸ் ஸ்டாண்ட் முன் கட்டினர். காலப்போக்கில் இவற்றை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. நாளைடைவில் 'டாய்லெட்டில்' இருந்து கோப்பை சேதமடைந்தது.குறிப்பாக குறவர் காலனியில் கட்டிய 'நம்ம டாய்லெட்' கட்டடம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பராமரிக்காமல் உள்ள 'டாய்லெட்டை' முறையாக பராமரித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சிவகங்கை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!