வாஷிங்டன்: அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட்லைனர் விமானம், பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்த காரணத்தால் நடுவானிலிருந்து திரும்பி வந்தது.
அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஜனவரி 2021ல் தங்களது விமானங்களில் முகக்கவசம் அணிவதை கடுமையாக்கியது. முகக்கவசம் அணிய மறுப்பவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என அப்போது அறிக்கை வெளியிட்டது. முன்னதாக பயணிகள் பலரும் முகக்கவசம் அணிய மறுத்து பணிப்பெண்களை திட்டுவதும், தொல்லை தருவதுமாக இருந்தனர். அதனால் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை இம்முடிவை எடுத்தது.

இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மியாமியில் இருந்து 129 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் வியாழனன்று லண்டனுக்கு புறப்பட்டது. அதில் விதியை பின்பற்றாமல் ஒரு பயணி முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். பயணிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பணிப்பெண்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் நடுவானிலிருந்து விமானம் மீண்டும் மியாமி திரும்பியது. முன்னதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியது, போலீசார் முகக்கவசம் அணியாத நபரை இறக்கி அழைத்துச் சென்றனர். அவரை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடைசெய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் சேர்த்தது.
வாசகர் கருத்து (12)
இதனை தமிழக RSB ஊடகங்கள் எப்படி சொல்லிஇருக்கும் ? ஒரு கற்பனை "ஒன்றிய அரசின் " கட்டுப்பாட்டில் இருக்கும் விமான போக்குவரத்து துறை இன்று ஒரு பெண் என்றும் பாராமல் 40 வயது பெண்ணை வழியில் இறக்கி விட்டு சென்றது , இதனை வன்மையாக கண்டிக்கிறோம் . உடனே தோழர் இலவச பிரியாணி , போராட்டங்களை அறிவித்தார் , நடிகர் அடுத்த படத்தில் இதனை ஒரு மையமாக வைத்து படம் எடுக்க போகிறார் என்றும் கேள்வி , "கலெக் ஷன், கமிஷன், கரெப்ஷன்" CCC கட்சியின் தலைவர் அவரது குடும்ப டிவி சேனல்களில் இதனை முழு அளவில் கண்டனத்துக்குரிய செய்தியாக வெளியிட ஏற்பாடு செய்தார் மற்றவை பின்னர்
அதிக சுதந்திரம் மிக ஆபத்து என்பதற்கு இந்த மேதாவி அமெரிக்கர்கள் முன் உதாரணம்
முக கவசம் அணிய சொன்னபோது ஒரு அமெரிக்கப் பெண் "நான் ஜட்டியே அணிவதில்லை...முக கவசம் மட்டும் ஏன் அணியவேண்டும் என்றார்.
இவர்கள் தங்களின் உடல்நலம் எக்கேடுகெட்டுப் போகட்டும் மற்றவர்களைக் கெடுக்க என்ன அதிகாரம் உள்ளது? இங்கும் பல பிரபலங்கள் கூட்டம் கூட்டுகிறார்கள் அவர்கள் அணிந்தாலும், மற்றவர்களை பற்றிக் கவலைப்படுவதில்லை மீடியாவில் திருமுகத்தைப் பார்த்து பரவசப்படுவது மட்டும்தான் நோக்கமாக உள்ளது ,
அமெரிக்காவின் இடதுசாரி பெண்ணாகயிருப்பாளோ