கேரளாவில் மொபைல் போன் உதவியுடன் திருட்டை தடுத்த பெண்
கோட்டயம்: கேரளாவில் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த திருடனை, மொபைல் போனில் உள்ள வசதியை பயன்படுத்தி, போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.
கேரளாவில் மாநிலம் கன்னுார் மாவட்டம் பாலா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயதான பெற்றோர், கோட்டயம் மாவட்டம் கீழுரில் வசிக்கின்றனர். இவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தன் மொபைல் போனில் பார்க்கும் தொழில்நுட்பத்தை அந்தப் பெண் இணைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தன் பெற்றோரின் வீட்டு மாடிப்படியில் மர்ம நபர் ஒருவர் ஏறிச் செல்வதை மொபைலில் இணைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த மகள் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி பெற்றோர் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவரை மொபைலில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வருவதைப் பார்த்த திருடன் மாடியில் இருந்து குதித்து தப்பியோடினார். போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். வயதானவர்கள் தனியாக இருப்பதை அறிந்து வீட்டு கதவை உடைத்து திருட அந்த நபர் முயற்சித்தது விசாரணையில் தெரிந்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.
கேரளாவில் மாநிலம் கன்னுார் மாவட்டம் பாலா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயதான பெற்றோர், கோட்டயம் மாவட்டம் கீழுரில் வசிக்கின்றனர். இவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தன் மொபைல் போனில் பார்க்கும் தொழில்நுட்பத்தை அந்தப் பெண் இணைத்துள்ளார்.

போலீசார் வருவதைப் பார்த்த திருடன் மாடியில் இருந்து குதித்து தப்பியோடினார். போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். வயதானவர்கள் தனியாக இருப்பதை அறிந்து வீட்டு கதவை உடைத்து திருட அந்த நபர் முயற்சித்தது விசாரணையில் தெரிந்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.
வாசகர் கருத்து (11)
இதுபோன்ற வீரப்பெண்மணிகளுக்கு காவல் துறையில் நியமனம் செய்யவேண்டும், மன்னிக்கவும் வேலைக்கு சேருவதற்கு முன்புதான் உடல்தகுதிகள் எல்லாமே வேலைக்கு சேர்ந்த பின்பு நாம்தான் பணியில் இருப்பவர்களை பார்க்கிறோம் சிலரால் நடக்கக்கூட முடியாது சிறு வயதாக இருந்தாலும். இன்றைக்கு தேவை வீரம் இதுதான் மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் . இனி இதுபோன்ற வீர செயல்களில் ஈடுபடுவோருக்கு மக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளில் முன்னுரிமை கொடுத்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
திருடன் நைட்டி போட்ருக்கான். செம காமடி. தவிர இது வீடு மாதிரி தெரியவில்லை.
பழைய காலத்து செங்கல் சைஸ் போன் வெச்சிருந்திருப்பாங்களோ ? அதை வெச்சி அடிச்சா கபால மோட்சம் தான் .. ஹா ஹா ..
தன் கையில்ல் போனை வைத்து தடுத்துவிட்டார் .
இதில் 2 ஜோக் ஒன்று. திருடன் நைட்டி போட்டுக் கொண்டு திருடவந்தது. இன்னொன்று திருடத் துவங்கும் முன்பு மாடிப் படிகளை தொட்டுக் கும்பிட்டது .🤑 இனிமே தொழிலை சரியா செய்யணும் ன்னா தீய முக விஞ்ஞான ஊழல் வகுப்புக்கு போ 😛