கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
செஞ்சி-விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த உலகலாம்பூண்டி பெருமாள் கோவிலில் பெயிண்ட் அடித்து மராமத்து பணி நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கோவில் வராண்டாவில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து கோவில் தர்மகர்த்தா சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!