பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட நபர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கூறியதாவது:டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில், ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட, கோவை கரும்புக்கடை பள்ளி வாசல் வீதியை சேர்ந்த முகமது உசேன்,42, கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் உள்ளார்.இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பேரில், மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவுப்படி, குண்டர் தடுப்பு காவலில் உசேன் அடைக்கப்பட்டார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, ஒரே மாதத்தில், மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!