dinamalar telegram
Advertisement

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் போலீசார் சோதனை; வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு

Share
Tamil News
சென்னை: முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி. அன்பழகன் மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள், மருமகள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரிமங்கலம் பகுதியில் மட்டும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.பாலக்கோட்டில் 8 இடங்களிலும் மாரண்டஹள்ளி 5 இடங்களிலும் தர்மபுரியில் 6 இடங்களிலும் பென்னாகரம்.பாளையம்புதூரில் ஒரு இடத்திலும் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

பள்ளியில் சோதனை



முன்னாள் அமைச்சர் அன்பழகன் பினாமி பெயரில் உள்ளதாக கூறப்படும், அரூர் அடுத்த செக்காம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், காலை, 5.00 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.இது போல் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ., கோவிந்த்சாமி வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.

ஆதரவாளர்கள் போராட்டம்



லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அவர்களுக்கு சுட சுட உணவு பரிமாறப்பட்டது.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    அப்படி போடு அறுவாளை . ரெய்டில் வகையாக மாட்டிக்கொண்டான் இந்த எத்தன்

  • Gopal - Chennai,இந்தியா

    இத்தனை நாட்கள் வீட்டிலா வைத்திருப்பான்? பெயருக்கு சில கோடி பணத்தை வைத்திருந்தால் சோதனையில் பிடித்துக்கொள்ளட்டும் என்று இருந்திருப்பன்.

  • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

    பணம் தின்று வாழும் பெரிய மனிதர்கள்.. மனசாட்சியே இல்லாத மனிதர்கள்..என்ன சொல்வது, மக்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது, பணம் துணைக்கு வராது என்று தெரிந்தும் திருந்தாத அரசியல் புள்ளிகள், வெட்கமே இல்லாமல் பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடித்து ஓசி சோறு சாப்பிடும் கேவலமான மனிதர்கள், ஒருவரிடம் இவ்வளவு என்றால் மொத்தத்தில் ?

  • muthu - tirunelveli,இந்தியா

    Is he corrupt or clean, court will judge. But lawyer fees will be settled from corrupt money only.

  • sankar - சென்னை,இந்தியா

    தானும் நாமம் போட்டுக்கொண்டு மத்தவங்களுக்கும் நாமம் சாத்தி சொத்து சேர்த்து காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டு இப்போது மாட்டிக்கொண்டார் போல்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்