கிராமத்திற்குள் புகுந்து 12 யானைகள் அட்டகாசம்
குடியாத்தம்:குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் புகுந்த 12 யானைகளை, வனத்துறையினர் விரட்டிஅடித்தனர்.
ஆந்திர மாநிலம் குப்பம் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த 12 யானைகள், வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே கொத்துார் கிராமத்திற்குள் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு புகுந்து, விவசாயி ராமச்சந்திரன், 56, என்பவரது நிலத்தில் நெற்பயிர்களை மிதித்து நாசம் செய்தன.குடியாத்தம் வனத்துறையினர், யானைகளை விரட்டியடித்தனர். ஆனால், வனப்பகுதிக்குள் செல்வது போல போக்கு காட்டிய யானைகள், டி.பி.பாளையம் பகுதியில் நுழைந்து, அங்குள்ள மாமரங்களை நாசம் செய்தன. பேர்ணாம்பட்டு வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!