சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், புதிய காவல் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் செயல்படும். மேலும், இவ்வாணையத்தின் உறுப்பினர்களாக ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு) அலாவுதீன், ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) ராதாகிருஷ்ணன், மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உறுப்பினர் - செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையம், காவலர் நலன், காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்கும். அதேபோல், காவலர் - மக்கள் இடையேயான உறவை மேம்படுத்துதல், புதிய பயிற்சி முறைகளை ஆணையம் பரிந்துரை செய்யும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் ஆணையம் பரிந்துரை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடியல் அரசில் ஓய்வு பெற்ற நீதிஅரசர்களுக்கு நல்ல வாய்ப்பு- அவங்களுக்கு ஆதரவானவாங்கன்னு சொல்லுங்க எல்லாருக்கும் இல்லை
காவல்நிலையங்களில் உள்ள சிசிடிவிகள் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும். அவைகளை மத்திய இடத்திலிருந்து கண்காணிக்க வேண்டும். பதிவுகள் நீதிமன்ற பெட்டகத்தில் வருடக்கணக்கில் பாதுகாக்கப்பட வேண்டும். அதே போல காவலர்கள் உடையுடன் காமிரா மற்றும் அவர்களது பேச்சுச்க்களை பதிவு செய்து அதையும் பெட்டகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். காவலர்களின் பேச்சுகளை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க வேண்டும். எங்கு சென்றாலும் குறைந்த பட்சமாக ரேண்டமாக இரண்டு காவலர்களை அனுப்புவது நல்லது. இதைச்செய்தாலே காவல்த்துறையில் நிம்மதியாக வேலை செய்வார்கள்.
"சென்னா மசாலா கொடுக்க தாமதம் தாபாவை நொறுக்கிய கும்பல்". இதையும் விசாரிக்கச் சொல்லுங்க.
விடியல் அரசில் ஓய்வு பெற்ற நீதிஅரசர்களுக்கு நல்ல வாய்ப்பு.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு புதுவாழ்வு
திட்டம்.Waste of money.இதனால் ஒரு பயனும் இல்லை.
விடியல் அரசில் ஓய்வு பெற்ற நீதிஅரசர்களுக்கு நல்ல வாய்ப்பு- அவங்களுக்கு ஆதரவானவாங்கன்னு சொல்லுங்க எல்லாருக்கும் இல்லை