புதுடில்லி: கோவிட் பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை பிப்.,28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை வரும் பிப்., 28 நள்ளிரவு 11:59 வரை நீட்டிக்கப்படுகிறது. அதேநேரத்தில் விமான கட்டுப்பாட்டகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் அதிக விலை குடுத்து சிறப்பு விமான டிக்கெட் வாங்கி பயணிக்கலாம்