
துாத்துக்குடி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், 2021 பிப்.,6 ல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சிலர், அனுமதியின்றி 350 பிளாஸ்டிக் பைகளில், ரேஷன் அரிசியைக் கொண்டு சென்றதைக் கண்டுபிடித்தனர்.அரிசி மற்றும் அதை கடத்த பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:
ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபராக மனுதாரர் பெயர் சேர்க்கப் பட்டுஉள்ளது, முதலாவது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்தால் தெரிகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கொள்முதல் செய்து, விற்பனை செய்த முக்கிய நபர் மனுதாரர் என்பதும் தெரியவந்துள்ளது. ரேஷன் அரிசியை ஏழைகள் பயன்படுத்துகின்றனர். அந்த அரிசியை கடத்துவது, ஏழைகளின் பொருளாதாரத்திற்கு எதிரான குற்றமாக அமையும். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மூவருக்கு 'குண்டாஸ்'
கடலுார் மாவட்டம் சிறுபாக்கம் போலீசார், கடந்த 26ம் தேதி, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மாங்குளத்தில் ஒரு லாரியை சோதனையிட்டதில், 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மங்களூரு ரஞ்சித், 25; வேல்முருகன், 30; சங்கரன்பாளையம் ராமச்சந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித், வேல்முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஃகா ஆகக்கா கண்டுபுடிச்சிட்டோம்ல.. இனி ஒரு புரட்சி நடக்கும்... ஹய்யோ ஹய்யோ...