dinamalar telegram
Advertisement

இலங்கை தமிழர்களுக்காக வாய் கிழிய பேசும் சில தமிழக கட்சித் தலைவர்கள், அந்த மக்களுக்கு, பத்து பைசா கூட கொடுத்திருக்க மாட்டார்கள் போலும்!

Share
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், மூன்றாம் கட்டமாக, 1,000 பேருக்கு புதிய வீடுகளை, நம் இந்திய அரசு கட்டி கொடுத்துள்ளது. இதுவரை, நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, 46 ஆயிரம் வீடுகளை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.

இலங்கை தமிழர்களுக்காக வாய் கிழிய பேசும் சில தமிழக கட்சித் தலைவர்கள், அந்த மக்களுக்கு, பத்து பைசா கூட கொடுத்திருக்க மாட்டார்கள் போலும்!காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை: கோவா மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் தான் போட்டி; ஆம் ஆத்மி - திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் தேறாது. பத்தாண்டு பா.ஜ., ஆட்சிக்கு மாற்று, காங்கிரஸ் மட்டுமே.

கோவா மாநில காங்., மூத்த தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நீங்கள், 'மூன்றாவது முறையாக, பா.ஜ., தான் ஆட்சியை தொடரும்' என்றா கூறுவீர்கள்... உங்கள் கட்சி வெல்லும் என சொன்னால் தான், இந்த பதவியாவது உங்களிடம் மிஞ்சும்!
கரூர் தொகுதி காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை:
பிரதமரின் மாண்பு அவரது ஆட்சியால், செயல்பாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது; அவரது ஆட்சி மீதான விமர்சனங்களால் அல்ல. ஊடகங்களை, பா.ஜ., மிரட்டலாம்; ஆனால், எட்டு கோடி தமிழக மக்களை எதுவும் செய்ய முடியாது.

மோடியை நீங்கள் பிரதமராக ஏற்றாலும், இல்லை, 'காங்., ராகுல் தான் பிரதமர்' என நீங்கள் நினைத்தாலும், எட்டு கோடி தமிழர்களுக்கும் மோடி தான் பிரதமர். கேட்டாலும், கேட்காவிட்டாலும், தமிழர்களுக்கு ஏராளமாக செய்து வருகிறார் பிரதமர் மோடி!பா.ஜ.,வில் அதிருப்தியுடன் இருக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: கடந்த நவம்பரில், ஐரோப்பாவின் வாடிகன் சிட்டி நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, போப்பை சந்தித்து, இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு முன், 1999ல், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, போப்பை சந்தித்து அழைத்தார். இந்தியா வருமாறு போப்பை அழைக்க, மோடியின் தாழ்வு மனப்பான்மை தான் காரணமா?

விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது, அங்கிருப்பவர்களை, 'எங்கள் வீட்டுக்கு வாருங்கள்...' என அழைப்பது இந்தியர் பண்பாடு தான்; அதைத் தான் மோடியும் செய்துள்ளார். தாழ்வு மனப்பான்மை அவருக்கு இல்லை; உங்களுக்குத் தான் இருக்கிறது போலும்!தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: வ.உ.சி.,யையும், வேலு நாச்சியாரையும், சர்வதேச தலைவர்களுக்கு தெரியாதாம். அதனால் தான், தமிழக அலங்கார ஊர்திக்கு டில்லி, குடியரசு தின ஊர்வலத்தில் அனுமதி இல்லையாம்!

தமிழக தி.மு.க., அரசின் அலங்கார ஊர்தியில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி படங்கள் வைக்கப்பட வாய்ப்பு அதிகம். ஒருவேளை, அதை பார்க்கும் சர்வதேச தலைவர்களுக்கு, இவர்கள் யார் என விளக்க வேண்டியிருக்கும். தமிழகத்தின் தர்மசங்கடமான நிலையை அந்த தலைவர்கள் அறிந்து, அதிர்ச்சி அடைய நேரிடும் என்பதை தவிர்க்க, அனுமதி மறுக்கப்பட்டிருக்குமோ?Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (24)

 • Samathuvan - chennai,இந்தியா

  இவர் அதிபுத்திசாலி என்ற போர்வையில் ஒரு அயோக்கியர். எல்லா ஊரிலும் இது போல ஒருத்தன் இருப்பான் அது போல தான் இவர் நம் நாட்டிலும். களையை களைவது ந‌ல்லது.

 • Samathuvan - chennai,இந்தியா

  ஒன்றிய அரசு இலங்கை போய் இப்படி உதவுவது தமிழ் மீது கொண்ட பாசமா? அல்லது மான்டரின் மீது உள்ள பயமா?

 • vel murugan - ARIYALUR,இந்தியா

  பிஜேபி என்ன பண்ணுச்சி அதா சொல்லு முதல்ல

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இங்கு உள்ள திராவிஷ கட்சிகள் பேசாமல் இருந்தாலே இலங்கை தமிழர்களுக்கு சுபிட்சம். இவர்கள் பேசிப்பேசி கெடுத்தார்கள்.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  இலங்கை தமிழரைவைத்து நன்ஙகு பணம் பார்த்தவர்கலீல் முதலில் யிருப்பது வைக்கோ, திருமா வெல்ல்லாம் அப்புறம் தான். செலவு செய்தவர் எம் ஜி ஆர்.

Advertisement