கடந்த ஆண்டில், இரண்டு பருவமழைகளின்போதும், கோவை நகரில் மிக அதிகளவில் மழை பெய்ததால், ஏற்கனவே பழுதாகியிருந்த ரோடுகள், மேலும் மோசமாயின. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கோவை நகரில் ரோடுகள் சீரமைப்புப் பணி எதுவும் நடைபெறவில்லை.
நிதிச்சுமையால் தடுமாற்றம்
நிதிச்சுமை காரணமாக, ரோடு சீரமைப்புப்பணி உள்ளிட்ட 150 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்து விட்டது. இதனால், நகருக்குள் இருக்கும் மாநகராட்சி பெரும்பாலான ரோடுகள் படுமோசமாக மாறியுள்ளன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால், கேபிள் பதிப்பு, குடிநீர்த் திட்டத்துக்கான குழாய்கள் பதிப்பு, பாலங்கள் கட்டும் பணி என ஏராளமான வளர்ச்சிப் பணிகளுக்காக, ரோடுகள் தாறுமாறாக தோண்டப்பட்டன.

ஒட்டுப்போடும் வேலையும் அரைகுறை
சில ரோடுகளில் மட்டும், ஒட்டுப் போடும் வேலை நடந்துள்ளது. அவையும் சின்ன மழைக்கே பெயர்ந்து விட்டன. தற்போது மழை நின்றிருக்கும் நிலையில், சிறப்பு நிதி ஒதுக்கி, இந்த ரோடுகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.ஆனால், அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் வாக்குறுதிகள் தருகின்றனரே தவிர, வேறெந்த வேலையும் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் நகரில் வாழும் பல லட்சம் மக்களும் தினமும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு கேட்டால் அவ்வளவுதான்!
தற்போதுள்ள சூழ்நிலையில், கோவை நகருக்குள் பல வீதிகளில் உள்ளே சென்று ஓட்டுக் கேட்டுப் போகவே முடியாது என்கிற அளவில் ரோடுகள் இருப்பதால், ஆளும்கட்சியினர், மக்களின் அதிருப்தியை நினைத்து, கடும் அச்சத்தில் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மாநகர ரோடுகளை சரி செய்யாவிட்டால், ஆளும்கட்சியினர் ஓட்டுக் கேட்டு ஊருக்குள் செல்வது அவ்வளவு எளிதாக இருக்காது; வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதே, தற்போதுள்ள கள நிலவரம்.
-நமது நிருபர்-
இருக்கவே இருக்கிறது, 'நூறாண்டு மழை, நாலு நாளில் கொட்டியது ' பல்லவி தைப்பொங்கல் நாளை புத்தாண்டாக்க நாங்களே பாடான பாடு படுகிறோம், சிற்றரசருக்கு பட்டாபிஷேகம் செய்ய வேறு அழுத்தம் தாங்கவில்லை இதில் ரோடுகள் இருந்தால் என்ன, மக்கள் குழிகளில் விழுந்து தனியாக இடுகாட்டுக்குப் போகும் செலவைக் குறைக்கிறோமே என்று நன்றி சொல்லுங்கப்பா எங்களுக்கு