dinamalar telegram
Advertisement

ஜன., 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை;... கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

Share
Tamil News
கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.புதுச்சேரியில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயங்கின.


அதே நேரத்தில், தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வை ஒத்தி வைத்து, கல்வித் துறை உத்தரவிட்டது.இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2,000ஐ கடந்தது. கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருவதால், 10ம் வகுப்பு முதல் கல்லுாரி வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வில்லை.


இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இன்று (நேற்று 18ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுகிறது.19ம் தேதி (இன்று) முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வீட்டில் இருந்தாலும், அரசு கூறும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.மாநிலத்தில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களில் இதுவரை 65 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்னும் 40 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.அவர்களில் 20 சதவீத மாணவர்களின் பெற்றோர்கள், தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்காமல் உள்ளனர்.ஒப்புதல் அளித்துள்ள 15 சதவீத மாணவர்களுக்கு, மீண்டும் பள்ளிகள் திறந்ததும் தடுப்பூசி செலுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement