Load Image
Advertisement

வசூலை அம்பலமாக்கிய பெண்கள்: சத்தமில்லாமல் வந்த தங்கம்

  வசூலை அம்பலமாக்கிய பெண்கள்: சத்தமில்லாமல் வந்த தங்கம்
ADVERTISEMENT
''ஊடரங்குல, வீட்டுக்குள்ள முடங்கறதுன்னா கஷ்டமா இருக்குக்கா... அதனாலதான் இன்னிக்கு காலங்காத்தாலயே உங்கள பாக்கணும்னு வந்தேன்'', என்றாள், சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தபடியே, மித்ரா.''பக்கத்து வீட்டுல இருக்கறவங்களா இருந்தாலும், பிரண்ட்ஸா இருந்தாலும், சமூக இடைவெளி, மாஸ்க் அணியறது கட்டாயம். திருப்பூர்ல 'தாலிக்கு தங்கம்' திட்ட நிகழ்ச்சில கலந்துகிட்ட தெற்கு வி.ஐ.பி.,க்கு, கொரோனா 'பாசிட்டிவ்' வந்துருக்கு. இதுல கலந்துக்கிட்ட தெற்கு தாலுகாவை சேர்ந்த மூணு தாசில்தார்களுக்கும் 'பாசிட்டிவ்' ரிசல்ட் வந்திருக்கு. இதை கேள்விப்பட்ட, 'தாலிக்கு தங்கம்' வாங்க வந்த பயனாளிங்க, ரொம்பவே பயந்துட்டாங்களாம். முகாம் நடத்தி, எங்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டு இருக்காங்களாம்.''இப்ப டெஸ்ட் எடுத்தா ரிசல்ட் தெரியறதுக்கு, அஞ்சு நாள் ஆகுதாமே. அதனாலதான், துணை தாசில்தார்களுக்கும் வேகமாக பரவிடுச்சுன்னு சொல்றாங்க. ரேஷன் பொருள் வினியோகத்தை கவனிக்கிற ஆபீசர், போன திங்கட்கிழமை டெஸ்ட் எடுத்துருக்காரு; வெள்ளிக்கிழமைதான் ரிசல்ட் வந்திருக்கு. இடைபட்ட நாட்கள்ல அவரு, பொங்கல் பரிசு வினியோகத்தை கவனிக்கற வேலை வேற பார்த்துருக்காரு...''இப்படி பண்ணாங்கன்னா, கொரோனா பரவாம என்ன செய்யும்?'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.''ஆமாங்க்கா, அந்த விழாவுல, கடந்த 2019ல இருந்து 'தாலிக்கு தங்கம்' திட்டத்துக்கு விண்ணப்பிச்ச பயனாளிகளுக்கு, இப்ப தான் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க; திருப்பூர்ல நடந்த நிகழ்ச்சியில, 'டோக்கன்' வழங்கப்பட்ட, 50 பயனாளிகளுக்கு தங்கம் கொடுத்துட்டு மத்தவங்களுக்கு இன்னொரு நாள்ல தர்றதா சொல்லியிருக்காங்க. கடுப்பான பெண்கள், 'ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும், 2,000 ரூபாய் வசூல் பண்ணீங்கள்ல… தங்கம் பெற்றுக்கொண்டோம்னு, கையெழுத்து வேற வாங்கியிருக்கீங்க. இப்பதர முடியாதுன்னு சொன்னா எப்படி?'ன்னு, சத்தம் போட்டிருக்காங்க. நிலைமை மோசமானதால, கருவூலத்தில இருந்து தங்க காசுகளை எடுத்து வரச்சொல்லி, பயனாளிங்ககிட்ட கொடுத்திருக்காங்க'' என்று, பகிரங்கப்படுத்தினாள் மித்ரா.மாநகராட்சி அதிகாரிகளின்'பினாமி' ரகசியம்''திருப்பூரை கார்ப்ரேஷனா அறிவிச்ச நாள்ல இருந்து, கார்ப்ரேஷன் ஆபீஸ்ல ஒரே சீட்ல அழுத்தமா உட்கார்ந்து வேல பார்க்குற பல பேரு, பல லகரம் சம்பாதிச்சுட்டு, பக்காவா 'செட்டில்' ஆகிட்டாங்களாம். டிரான்ஸ்பருக்கு பயந்து, 'புரமோஷன்' வந்தாலும் வேண்டாம்னு சொல்றாங்கன்னா, பார்த்துக்கோயேன். 'புரமோஷன்' வந்தாலும், சிலரு போக மனசில்லாம இருக்காங்களாம். அந்த மாதிரி அலுவலர்களின் சொத்து பட்டியலை, ஒற்றர் படை சேகரிச்சு, மேலிடத்துக்கு அனுப்பி வச்சிருக்காங்களாம்.''கார்ப்ரேஷனுக்கு சொந்தமா நிறைய வண்டிங்க இருந்தும் பல மாசமா 'ரிப்பேர்' ஆகி நிக்குது. அதை சரிசெஞ்சு பயன்படுத்தாம, அதிகாரிங்க பல பேரு, வாடகை வண்டிகள்ல தான் 'ட்யூட்டி' பார்க்கிறாங்களாம்.''வேணும்னுதான் இப்படிப் பண்றாங்களாம். அதிகாரிங்க பயன்படுத்துற வாடகை வண்டிங்க, அவங்களோட பினாமி பேர்ல ஓடுதாம்,'' என்று, உண்மை தகவலை துல்லியமாய் முன்வைத்தாள், சித்ரா.''ஆகா... இப்பவே கண்ண கட்டுதே'' என, கலாய்த்த மித்ரா, ''அப்படின்னா, கார்ப்ரேஷன்ல கூடிய சீக்கிரம் 'டிரான்ஸ்பர்' வரும்ன்னு சொல்றீங்க, அப்படித்தானே'' என்று 'அப்பாவி'யாய்க் கேட்டாள்.''மதுவிலக்கு பிரிவுல மாமூல் மழை தானாம்க்கா... சிட்டிக்குள்ள இருக்கிற தாபா ரெஸ்டாரன்ட்கள்ல இருந்து மாசா, மாசம் மதுவிலக்கு பிரிவு போலீஸ்காரங்களுக்கு மாமூல் போயிடுதாம். அதை கலெக்ஷன் பண்றதுக்காக போற ஒருத்தரு, ரெஸ்டா ரன்ட்கள்ல சமைக்கிறதுக்காக வளர்க்கிற நாட்டுக்கோழி, காடை, கவுதாரி, புறாக்களை, பெரிய அதிகாரி கேட்டார்ன்னு சொல்லி, சும்மாவே எடுத்துட்டு போயிடறாராம்,'' என்ற மித்ராவிடம் 'பெருமூச்சு'.'கஸ்டமர்ஸ் சாப்பிடுறதையெல்லாம், இவங்களே சாப்பிட்ருவாங்க போல இருக்கே' என, அங்கலாய்த்தாள் சித்ரா.அமைச்சர் பரிந்துரையில்தப்ப முயன்ற ஆசிரியர்''கலெக்டர் ஆபீஸ் கேம்பஸ்ல, பார்க்கிங் செய்ற டூவீலர்களை களவாடினதா, அரசு பள்ளியில வேல பார்க்குற ஓவிய ஆசிரியரை கைது பண்ணாங்கள்ல. தேர்தல் சமயத்துல, குண்டடம் பக்கத்துல அவருக்கு ட்யூட்டி போட்டப்போ, பொறுப்பில்லாம நடந்துக்கிட்டார்ங்கற மாதிரி, அவரு மேல தொடர்ந்து புகார் இருந்துக்கிட்டே இருக்குதாம். இதையெல்லாம் ஆரம்பத்திலயே கண்காணிச்சு, கண்டிக்க வேண்டிய பெரிய ஆபீசர், எதையும் கண்டுக்காததால தான், இத்தனை பிரச்னைன்னு சொல்றாங்க.அதுமட்டுமில்லா, சேதி சொல்ற துறையை கவனிக்கிற மினிஸ்டருக்கு பாதுகாப்பு தர்ற வேலைல இருக்கற ஒரு போலீஸ் ஆபீசர், அந்த ஓவிய ஆசிரியரோட வகுப்பு தோழராம். அவரை பிடிச்சு, மினிஸ்டர் ரெக்கமன்டேஷன்ல தப்பிச்சுடலாம்ன்னு, ஓவிய ஆசிரியர் கணக்கு போட்டிருக்காரு. ஆனா, அவரு கையும், களவுமா சிக்கிட்டதால, அந்த போலீஸ் ஆபீசர் ஒதுங்கிட்டாராம்,'' என்று, பின்னணி தகவலை பின்னியெடுத்தாள், சித்ரா.''லோக்கல் மினிஸ்டருக்கு உதவியாளரா இருக்கிற ஒருத்தரு, அதிகார தோரணையுடன் நடந்துக்கிறாராம். அவர்னாலயே மினிஸ்டர் பேரு டேமேஜ் ஆகிடும்னு கூட பேசிக்கிறாங்க,'' என்று மித்ரா கூறியபோதே மொபைல்போன் ஒலித்தது; ''யாரு 'சிவகுமார்' அண்ணனா. நல்லா இருக்கீங்களா?'' என நலம் விசாரித்து, இணைப்பை துண்டித்தாள்.'தில்' இழக்கும்வசூல் மன்னர்கள்''சிட்டியில வேல பார்த்த பெரிய போலீஸ் ஆபீசரை, திடீர்ன்னு டிரான்ஸ்பர் பண்ணாங்கள்ல. அவங்க தொழில்துறைக்காரங்க நடத்துன ஒரு மீட்டிங்ல பேசினப்ப, 'என்ன பிரச்னைன்னாலும், என்கிட்டேயே பேசுங்க. மினிஸ்டர், சி.எம்., லெவலுக்கு போயிட வேண்டாம்; நானே பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்காங்க. இந்த தகவல் ஒற்றர்படை மூலமாக மேலிடத்துக்கு போயிருக்கு. அதுமட்டுமில்லாம, தன்னோட ஆபீஸ் வட்டாரத்துல, குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஆபீசர்களுக்கு தான் அவரு முக்கியத்துவம் தர்றதாவும் கூட, அந்த 'ரிப்போர்ட்'ல சொல்லியிருக்காங்களாம்.இதனாலதான், அவங்களை துாக்கியடிச்சுட்டங்கான்னு பேசிக்கிறாங்க. புதுசா வந்திருக்க ஆபீசர், கண்டிப்பானவராம். இதனால, கல்லா கட்றதுல 'கொடி' கட்டி பறந்த ஆபீசர்ங்க எல்லாம், கிலியடிச்ச மாதிரி இருக்காங்களாம்,'' என்றாள், மித்ரா நமுட்டுச்சிரிப்புடன்.''பல்லடத்துல, 'பொல்யூஷன்' பிரச்னையை சரிசெஞ்சு தரணும்ன்னு விவசாயிங்க நாலு தடவைக்கு மேல புகார் பண்ணியும், அதை கவனிக்க வேண்டிய மாசுகட்டுப்பாடு வாரிய சவுத் ஆபீசர் கொஞ்சமும் அலட்டிக்கறதே இல்லையாம். 'நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட்'ன்னு சொல்லிக்கிறாரே தவிர, செயல்ல ஒண்ணும் காணோமாம். ஒரு வேல காசுக்கு கட்டுப்பட்ட வாரியமா இருக்குமோ'' என்று கலகலத்த சித்ரா, ''அடுத்த வாரம் அங்க போறப்ப, 'சாமிநாதன்' அங்கிளை பார்த்துட்டு வரணும்'' என்றாள்.மண் எடுக்கஅனுமதித்தது யார்?''அந்தந்த துறையை கவனிக்கிற அதிகாரிங்க பொறுப்பை தட்டிக்கழிக்கிறதால தான், பல பிரச்னைங்க வருது. பொங்கலுக்கு முன்னாடி நாள், அவிநாசி வெள்ளியம்பாளையம் பக்கம் இருக்கிற கரைப்பாளையத்துல, குட்டைல குளிக்க போன, 11 வயசு பையன் சேத்துல சிக்கி இறந்துட்டான். அந்த குட்டை இருக்கிற இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா இடமாம். 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நிக்கிற அளவுக்கு, அங்க இருந்து மண் எடுத்ததால தான், தண்ணீர் தேங்கி நிக்குதுன்னு, விசாரணைக்கு போன போலீஸ்காரங்க சொல்றாங்க. அந்தளவுக்கு மண் எடுக்க யாரு 'பர்மிஷன்' கொடுத்தாங்கன்னு விசாரிக்க வேண்டிய ரெவின்யூ ஆபீசருங்க, 'சைலன்டா' இருக்காங்களாம்.''இதே மாதிரி தான், தெற்கு பார்த்த தாலுகா ஆபீஸ்கிட்ட இருந்து, 50 மீ., துாரத்துல இருக்கிற அரசு நிலத்துல, தகர ெஷட் போட்டு ஆக்கிரமிச்சிருக்காங்க. 'ஆக்கிரமிப்பு எடுக்க போறோம் வாங்க'னு, சவுத் அதிகாரிங்க, போலீசை கூப்பிட, அங்க ஒரு வி.ஐ.பி., வந்திருக்காரு. இந்த டைம்ல ஆக்கிரமிப்பு மேல கை வச்சீங்கன்னா பிரச்னை பெரிசாகிடும்; அப்புறம் பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டாங்களாம்'' என்று, மித்ரா, வெளிப்படையாக பேசினாள்.''நீ சொல்றத பாத்தா, ஆக்கிரமிப்பை எடுக்க, யாரோ தடை போடறாங்க போலயே'' என சரியாக யூகித்தாள் சித்ரா.ரேஷனில் வாங்கிய கரும்பை வெட்டி, துண்டாக நறுக்கி மேஜை மீது வைத்தாள் சித்ரா. ஒரு துண்டை எடுத்து வாயில் போட்ட மித்ரா, ''கரும்பை பார்க்கவும் தான் ஞாபகம் வருது. பொங்கலுக்கு முன்னாடி நாள், நைட், 10:45 மணிக்கு ஊத்துக்குளி ரோட்ல இருக்க ஒரு மால் பக்கம் போன போலீஸ் ஜீப்ல இருந்த இறங்கின போலீஸ்காரங்க, ஆறு ஜோடி கரும்பை வாங்கிட்டு, காசு கொடுக்காம வந்துட்டாங்களாம்,'' என்றாள்.''கரும்பு தின்ன யாராவது கூலி கேப்பாங்களா. நிறைய இடங்கள்ல இப்படி தான் நடந்திருக்கு'' என்று கலகலத்தாள், சித்ரா. ''நீங்க சொல்றது சரிதான்கா...'' என்று சொன்ன மித்ரா, கரும்பின் சுவையிலேயே மூழ்கினாள்.''சிட்டிக்குள்ள இருக்கிற தாபா ரெஸ்டாரன்ட்கள்ல இருந்து மாசா, மாசம் மதுவிலக்கு பிரிவு போலீஸ்காரங்களுக்கு மாமூல் போயிடுதாம். அதை கலெக்ஷன் பண்றதுக்காக போற ஒருத்தரு, ரெஸ்ட்ரான்ட்கள்ல சமைக்கிறதுக்காக வளர்க்கிற நாட்டுக்கோழி, காடை, கவுதாரி, புறாக்களை, பெரிய அதிகாரி கேட்டார்ன்னு சொல்லி, சும்மாவே எடுத்துட்டு போயிடறாராம்,''கரைப்பாளையத்துல, குட்டைல குளிக்க போன, 11 வயசு பையன் சேத்துல சிக்கி இறந்துட்டான். அந்த குட்டை இருக்கிற இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா இடமாம். 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நிக்கிற அளவுக்கு, அங்க இருந்து மண் எடுத்ததால தான், தண்ணீர் தேங்கி நிக்குதுன்னு, விசாரணைக்கு போன போலீஸ்காரங்க சொல்றாங்க.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement