dinamalar telegram
Advertisement

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு; 21ம் தேதி வெளியாக வாய்ப்பு

Share
வரும் 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத் துக்கு, மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து இருப்பதால், 21ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.


தமிழகத்தில் 2016ல் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. முதலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுக்காக தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, சில மாதங்கள் தேர்தல் தள்ளிப் போனது. உச்ச நீதிமன்ற உத்தரவுஅதன்பின், வெவ்வேறு காரணங்களை காட்டி, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியும் தடைபட்டது.


கடந்த 2019 டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அதிலும் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, கடந்த அக்டோபரில் தேர்தல் நடந்தது. ஆனால், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. நான்கு மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டுஇருக்க வேண்டும்.


இது தொடர்பாக, வரும் 27ம் தேதியன்று, உச்ச நீதிமன் றத்தில் தமிழக அரசின் சார்பில் பதில் தர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கிடையில், சென்னை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்துக்கு அழைப்புமனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து 100 வார்டுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.


இந்த வழக்கு உட்பட வேறு எந்த சட்டரீதியான தடைகளும் இல்லாத நிலையில், மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது. வரும் 19ம் தேதி, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின், வரும் 27ம் தேதிக்குள் எந்த நாளிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.


மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, 'வரும் 27ம் தேதிக்குள் தேர்தலை நடத்த இயலாவிட்டாலும், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். 'இல்லாவிடில், மாநில தேர்தல் ஆணையம் கடும் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும். பிப்., மூன்றாம் வாரத்துக்குள் தேர்தலை நடத்தும் வகையில், 21ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது' என்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இந்த அறிவுப்பு முன்பாக வீட்டுமனை, வீட்டு வரைபடம், கட்டிய வீட்டுக்கு வரி, குடிநீர் மற்றும் மின் இணைப்புகளை சீக்கிரமாக பெற்றுவிடுங்கள். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு உண்மை சம்பவம் நினைவுக்கு வருகிறது. தனியார் வீட்டுக்கு மின்சார இணைப்புக்கு அதிகாரிகள் வந்து பள்ளம் நோண்டும்போது ஒருவர் தடுக்கிறார், அதிகாரிகள் அந்த வீட்டுக்காரரிடம் ஐயா நாங்கள் எதுவும் செய்யமுடியாது, நீங்கள் அவரை சமாதானம் செய்து பிறகு அலுவலகம் வாருங்கள் என்று கூறிசென்றுவிட்டனர், வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க காவலர்கள் துணையுடன் மீண்டும் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து பள்ளம், பறிக்க அதே நபர் தங்கள் நண்பர்களுடன் வந்து அந்த பள்ளத்துக்குள் அமர்ந்து எனக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் மட்டுமே இணைப்பு கொடுக்க முடியும் என்று கூற காவலர்கள் தட்டிக்கேட்க அவர், நீங்கள் யார், உங்களைப்பற்றி எங்களுக்கு தெரியும், நான் நினைத்தால் உன்னை என்று ஒருமையில் பேசி, மின்சார ஊழியர்களையும் ஒருமையில் பேசி, வீடு உரிமையாளரை இனி இந்த வீட்டில் வாழமுடியுமா, என்றெல்லாம் மிரட்ட ஒரே கூடிவிட்டது. எல்லோரும் சிரிக்கத்தான் முடிந்தது, கடைசியில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த பள்ளத்துக்குள் இருந்தவரை சமாதானம் செய்து, அவர் கேட்ட கேள்விக்கு (நான் எவ்வளவு பணம் செலவு செய்து இந்த பதவிக்கு வந்திருக்கிறேன், அப்போ நான் எப்படி பிழைப்பது) பதிலாக அவர் கேட்ட பணத்தில் ஒரு தொகையை வாங்கிக்கொடுத்து அனுப்பிய பிறகுதான் மின்சார இணைப்பு வந்தது. இது ஊருக்கே தெரியும், சுதந்திரம் என்பது இதுதான் போலும், எனக்கு எல்லா கட்சிகாரர்களும் மிக நெருங்கிய நண்பர்கள், ஒருமுறை சுகாதாரசீர்கேடு பற்றி அவரிடம் புகார் செய்தேன், அதற்க்கு அவர் ஐயா எங்களுக்கு அவைகளை எல்லாம் கவனிக்க நேரம் இல்லை, யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்று சிரித்தபடி கூறினார் பல லட்சம் ஈட்டிய அவர் இன்று உயிரோடு இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி, இதுதான் இன்றய நிலைப்பாடு ...என்று தணியும் இந்த சுதந்திர தாகம், வந்தே மாதரம்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்