dinamalar telegram
Advertisement

தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் ஜோரா கை தட்டுவோம்! கோவைக்கு இரண்டாம் இடம்

Share
Tamil News
ADVERTISEMENT
கோவை:மாநில அளவில் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியவர்களின் பட்டியலில் கோவை மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்தம், 81.69 சதவீதம் பேர், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.கொடிய கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு முதல், உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. புதிது, புதிதாக வைரஸ் மாறுபாடு அடைந்து, பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ், நம் நாட்டிலும் பரவி நமது அருகேயும் வந்துவிட்டது.'ஆக்டிவ்' கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இச்சூழலில், கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் --வி ஆகிய 3 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜன.,16ம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.தடுப்பூசி போடுவதற்கு முதலில் தயக்கம் காட்டிய மக்கள், அதன்பிறகு பாதிப்பை உணர்ந்து தற்போது ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
வாரம்தோறும் சிறப்பு முகாம்கள் மூலம், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகத்தில், 3.17 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனாலும், 2 டோஸ் தடுப்பூசி போடுவதில் தமிழகம் பின்தங்கியே உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பட்டியலில், முதல் இடத்தில் உள்ளது.கடலூர், கோவை, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், ஒரு டோஸ் தடுப்பூசி அதிகமாக போடப்பட்டுள்ளது.
இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களின் பட்டியலில், 85.65 சதவீதத்துடன் நீலகிரி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து, 81.69 சதவீதம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கோவை மாவட்டம் 2ம் இடத்தில் உள்ளது.100 சதவீதமே இலக்கு!கோவை கலெக்டர் சமீரன் கூறுகையில், ''100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற இலக்கை நோக்கி, கோவை மாவட்டம் விரைவாக சென்று கொண்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மட்டுமின்றி, வீடு தேடி சென்று, தடுப்பூசி போடும் பணியும் நடக்கிறது. அதேபோன்று மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் போடும் பணியும் நடந்து வருகிறது,'' என்றார்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement