அசாம் போலீசாருக்கு உதவும் ஜேம்ஸ்பாண்ட், அயர்ன்மேன்
கவுஹாத்தி-குற்றங்கள் மற்றும் விதிமீறல்களை தடுப்பதற்காக ஜேம்ஸ்பாண்ட், அயர்ன்மேன் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை அசாம் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. குற்றங்கள் மற்றும் விதிமீறல்களை தடுப்பதற்காக மாநில போலீசார் புதிய யுக்தியை பின்பற்றி வருகின்றனர். சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் செய்து வருகின்றனர்.
இதற்கு கார்ட்டூன் கதாபாத்திரங்களான ஜேம்ஸ்பாண்ட், அயர்மேன், கேப்டன் அமெரிக்கா போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.இந்தக் கதாபாத்திரங்கள் கூறும் வாசகங்கள், வசனங்களின் அடிப்படையில் அசாம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.இது குறித்து கவுஹாத்தி போலீஸ் கமிஷனர் ஹர்மீத் சிங் கூறியுள்ளதாவது:அனைத்து தரப்பு மக்களும் இந்த பிரசாரத்துக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் கூட, நாங்கள் பயன்படுத்தும் பிரசார வாசகங்களை பயன்படுத்த துவங்கிஉள்ளனர். ஆப்ரிக்க நாடான உகாண்டா உட்பட பல நாடுகளிலும், இந்த வாசகங்களுக்கு வரவேற்பு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


மற்ற மாநிலங்களில் கூட, நாங்கள் பயன்படுத்தும் பிரசார வாசகங்களை பயன்படுத்த துவங்கிஉள்ளனர். ஆப்ரிக்க நாடான உகாண்டா உட்பட பல நாடுகளிலும், இந்த வாசகங்களுக்கு வரவேற்பு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டுக்கள், வந்தே மாதரம்