dinamalar telegram
Advertisement

வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்ற சூப்பர் மாம் புலி விடைப்பெற்றது!

Share
போபால்: மத்திய பிரதேசத்தின் பென்ச் புலிகள் காப்பகத்தில் தனது வாழ்நாளில் 29 குட்டிகள் போட்டு 'சூப்பர் மாம்' என்று புகழப்பட்ட காலர்வாலி எனும் பெயர்கொண்ட புலி வயது மூப்பினால் இறந்தது.


பல்லுயிர்ச்சூழல் நிறைந்த காட்டில் மட்டுமே புலிகள் இருக்கும். ஒரு காட்டில் புலியின் நடமாட்டம் உள்ளது என்றால் அக்காட்டின் ஆரோக்கியம் சீராக உள்ளது என பொருள். ஒரு காலத்தில் உலகளவிலான புலிகள் எண்ணிக்கையில் 80 சதவீதம் இந்தியாவில் தான் இருந்தது. வேட்டை, காடுகள் அழிப்பினால் அதன் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைந்தது. 1973ல் 'புராஜக்ட் டைகர்' புலிகள் வேட்டை தடை செய்யப்பட்டு, அவற்றுக்கான வனக் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் அந்த சொற்ப எண்ணிக்கை காப்பாற்றப்பட்டு தற்போது சுமார் 3 ஆயிரம் புலிகள் இந்தியாவில் உள்ளன.

அதிலும் மத்திய பிரதேசம் 526 புலிகளுடன் நாட்டின் புலி மாநிலம் என 2018ல் விருது பெற்றது. அங்குள்ள பெஞ்ச் புலிகள் காப்பகத்தில் வாழ்ந்த காலர்வாலி எனும் 17 வயது புலி நேற்று (ஜன., 15) இறந்தது. 2005 செப்டம்பரில் டி-7 எனும் புலி ஈன்ற 4 குட்டிகளில் ஒன்று தான் இந்த காலர்வாலி. 2008 முதல் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கட்டப்பட்டது. நீண்ட ஆண்டுகள் அதனுடன் இருந்ததால் அதனை காலர்வாலி என அழைக்கத் தொடங்கினர்.


இப்புலி 2008 முதல் 2018 வரை 29 குட்டிகளை ஈன்று சாதனைப்படைத்துள்ளது. முதன்முதலில் மே 2008ல் 3 குட்டிகள் போட்டது. அவற்றில் எதுவும் பிழைக்கவில்லை. 2010ல் அரிதாக ஐந்து குட்டிகளை பெற்றது. கடைசியாக 2018ல் நான்கு குட்டிகளைப் போட்டது. இப்புலி பெற்ற 29 குட்டிகளில் 25 உயிருடன் உள்ளன. புலியின் சராசரி வாழ்நாள் 12 ஆண்டுகள். இப்புலி 17 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • kulandai kannan -

    29 குட்டிகளைப் பெற்றதற்கு, ஆண் புலிகளையும் பாராட்டத்தானே வேண்டும். ஹிஹி

  • K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா

    புலியின் சாதனை பாராட்டத்தக்கது. அதன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்