வேலுார்:வேலுாரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் உள்ளிட்ட 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.வேலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. வேலுார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட்டாக இருப்பவர் ஆல்பர்ட் ஜான், 40. கடந்த வாரம் சொந்த ஊரான கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திற்கு சென்று வந்தார். இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.இதில் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். வேலுார் மாவட்டத்தில் 337 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
"....கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் உள்ளிட்ட 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.வேலுார் மாவட்டத்தில்..." சோ, அவர்கள் முகக்கவசம் அணியவில்லை. ஏன் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது?