சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி மாதம்14 ம் தேதி நடைபெற உள்ள தேதியை மாற்ற வேண்டும் என மாநில பா.ஜ., தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் பஞ்சாப் உத்தரகண்ட், உ.பி., கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் உ.பி., மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகவும், மற்ற மூன்று மாநிலங்களான கோவா, உத்தரண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி பஞ்சாப் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மாநில பா.ஜ., கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதே வேளையில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி மாநிலத்தில் உள்ள பெரும்பாலானோர் குரு ரவிதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு முன்னதாகவே வாரணாசிக்கு சென்று விடுவர் . இதன் காரணமாக மாநில சட்டசபைக்கு வரும் 14ம் தேதி நடத்த உள்ள தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் பஞ்சாப் உத்தரகண்ட், உ.பி., கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் உ.பி., மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகவும், மற்ற மூன்று மாநிலங்களான கோவா, உத்தரண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி பஞ்சாப் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மாநில பா.ஜ., கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அப்ப அந்த குரு ரவி தாஸ் ஐ பார்க்க போனதால் பீ ஜே பீ பஞ்சாப் மாநிலத்தில் வெல்ல முடியவில்லை, இல்லை என்றால் நாங்க அங்கே புடுங்கி இருப்போம் என்று சொல்லி உதார் விட்டுடலாம். ஆனால் பஞ்சாப்பில் உங்களுடைய பருப்பு வேகாது. நீங்கள் தப்பு பண்ணி விட்டீர்களே மோடி அதாவது கொஞ்சம் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து பஞ்சாப் போனப்ப அந்த எட்டு லட்சம் விலை உள்ள பைனாகுலர்ஆல் நீங்க கொஞ்சம் மேலே இருந்து கீழே பார்த்து இருக்கலாம் எத்தனை பேரு அந்த கூட்டத்திற்கு வந்து இருக்கானுங்க என்று, ஆனா நீங்க என்ன பண்ணுவீங்க இந்த ஊ பீ தேர்தலைப் பற்றியே நினைத்து உங்களால் சரியா கூட தூங்க முடியல. அதனால் வந்த வினை. உங்க சேர்க்கை சரியில்லை என்பதால் தான் இது நடந்தது. புரிந்து கொள்ளுங்கள்.