Load Image
dinamalar telegram
Advertisement

அகிலேஷை முதல்வராக்குவோம்: பா.ஜ.க.,விலிருந்து விலகிய 3வது அமைச்சர்

லக்னோ: உ.பி.,யில் ஏற்கனவே இரு அமைச்சர்கள் பா.ஜ.க.,விலிருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த நிலையில், இன்று (ஜன., 16) மூன்றாவதாக தாரா சிங் சவுகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவுடன் கைகோர்த்துள்ளார்.


Latest Tamil News


உ.பி., சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய நான்கு பெரிய கட்சிகள் களத்தில் உள்ளன. மேலும் தனித்த செல்வாக்கு பெற்ற சுயேட்சைகள் பலரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்க நெருங்க பா.ஜ.க., மீது அதிருப்தியிலுள்ளவர்கள், சீட் வாய்ப்பு குறைவானவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைகின்றனர். பிற்படுத்தப்பட்ட சாதியில் முக்கிய தலைவரான முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தொடங்கி பல பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர்.

Latest Tamil News

இந்நிலையில் இன்று அகிலேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்றாவது பா.ஜ.க., அமைச்சரான தாரா சிங் சவுகான் சமாஜ்வாதியில் இணைந்தார். அவருடன் பா.ஜ.க., கூட்டணி கட்சியான ஆப்னா தளத்தின் எம்.எல்.ஏ., ஆர்.கே.வர்மா என்பவரும் கட்சித் தாவியுள்ளார். 'உ.பி.யின் அரசியலை மாற்றி அகிலேஷ் யாதவை மீண்டும் முதல்வராக்குவோம். ஓ.பி.சி., மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். மாற்றம் தவிர்க்க முடியாதது.' என முன்னாள் பா.ஜ.க., அமைச்சர் தாரா சிங் கூறினார்.


வாசகர் கருத்து (14)

  • ராஜா -

    இது நம்ப ஊருப்பக்கம் இருந்து போன பீஸ் மாதிரி தெரியுது. இது ஒழுங்கா வேலை செய்யலேன்ணு துறத்தியிருக்காங்க போல. அதான் வெளியே வந்து டகல்டி விடுது...

  • ராஜா -

    ....

  • ஆரூர் ரங் -

    🤔 உனக்கு டெபாஸிட்டாவது கிடைக்குமா? அதைப் பற்றி கவலைப்படு

  • ஆரூர் ரங் -

    🤔 உனக்கு டெபாஸிட்டாவது கிடைக்குமா? அதைப் பற்றி கவலைப்படு

  • Bhaskaran - Chennai,இந்தியா

    உன்னமாதிரி எத்தனையோ அல்லக்கைகளை பார்த்திருக்கிறோம் .அண்ணா சொன்ன மாதிரி தன் நிழல் கூட கூட வராத அளவுக்கு வாய்ஸ் உள்ளவர்கள் இவர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்