தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 23,975 ஆக சற்று குறைவு : 12,484 பேர் நலம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 பேர் உயிரிழந்துள்ளனர். 12,484 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 23,989 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 23,975 ஆக சற்று குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,40,720 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 23,957 பேர், வங்கதேசம் சென்று திரும்பியவர்கள் 3 பேரும் பீஹார் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா 4 பேரும் ஜார்கண்ட் ,மற்றும் ஆந்திரா சென்று திரும்பிய தலா இருவரும் மேற்குவங்கம், மேகாலயா மற்றும் கேரள மாநிலம் சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 23,975 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,39,923 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,95,48,455 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 14,197 பேர் ஆண்கள், 9,778 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 17,17,538 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 12,22,347 ஆகவும் அதிகரித்து உள்ளது. 12,484 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,60,458 ஆக உயர்ந்துள்ளது.
22 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 11 பேரும் , அரசு மருத்துவமனையில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,989 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,978 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.16 ம் தேதி) 8,987ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்
வாசகர் கருத்து (2)
இரண்டாவது அலையின் பொது பரிசோதனை எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. பாதிப்பு அதிகமாய் இருந்தது. இன்று பரிசோதனை மொத்த விபரம் தெரியாததால் தோத்து ஏற்றமா குறைவா என்பதனை கணிக்க இயலாது. ஒரு எண்ணம் குறைந்தாலும் குறைவுதான். அதுவரை மன சாந்தி.
இந்த பண்டிகை காலத்தில் டஸ்மாக் மூலம் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்தும் அதற்குக் காரணம்.