dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு துவக்கம்

Share
திருவாடானை-திருவாடானை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டு துவங்கப்பட்டுள்ளது.திருவாடானையில் அரசு மருத்துவமனை உள்ளது. தாலுகா தலைமைமருத்துவமனையான இங்கு, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும்வகையில் தனி வார்டு துவங்கபட்டுள்ளது. மருத்துவமனை அருகே உள்ள தனி கட்டடத்தில் 30 படுக்கைகள் கொண்ட வார்டுகள் உள்ளன.இது குறித்து மருத்துவஅலுவலர்கள் கூறியதாவது: ஆக்சிஜன் வசதியுடன்இங்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா தொற்று அதிகமாகும் பட்சத்தில்ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement