dinamalar telegram
Advertisement

மே.வங்கத்தில் 4 மாநகராட்சி தேர்தல் ஒத்திவைப்பு

Share
கோல்கட்டா :கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் நான்கு மாநகராட்சிகளின் தேர்தல் மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சிலிகுரி, சந்தன்நகர், பிதன் நகர் மற்றும் அசன்சல் ஆகிய மாநகராட்சிகளுக்கு 22ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று (ஜன.15) மாநில தேர்தல் ஆணையத்துக்கு மாநில அரசு அனுப்பிய கடிதத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநகராட்சி தேர்தலை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.இதையடுத்து நான்கு மாநகராட்சிகளிலும் இம்மாதம் 22க்கு பதிலாக பிப்., 12ல் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • தமிழன் - Madurai,இந்தியா

    திதியின் மோதி பீதி. கொரோணாவுக்கு பயபட்ர ஆளா அந்த அம்மணி? இது வேற பயம் பையா.

Advertisement