dinamalar telegram
Advertisement

கள்ளக்குறிச்சி நகரில் ஆக்கிரமிப்புகள்...அகற்றப்படுமா?

Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள நான்கு முக்கிய சாலைகளிலேயே வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகம், பள்ளிகள், வங்கிகள் உள்ளன. நகரின் மைய பகுதிகளாக விளங்கும் இந்த நான்கு சாலைகளும் ஆக்கிரமிப்புகளால் குறுகலாகிப் போனது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட தலைநகர் அந்தஸ்தை பெற்றதைத் தொடர்ந்து, நகரின் மக்கள் தொகை பெருக்கம், வாகன பெருக்கம், குடியிருப்புகள் உருவாதல், நகர பகுதி விரிவாக்கம், தினமும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் படிப்படியாக கூடிக்கொண்டே வருகிறது.

அதேபோன்று கள்ளக்குறிச்சி நகர பகுதியிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட அதிநவீன அரிசி ஆலைகள், 3 கரும்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஏராளமான மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன.மாவட்ட தலைநகருக்குண்டான அத்தனை வளர்ச்சி பணிகளிலும் முதன்மையானதாக விளக்கும் கள்ளக்குறிச்சி நகர பகுதி மட்டும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே உள்ளது.நகரின் முக்கிய சாலைகளான காந்தி ரோடு, சேலம், சங்கராபுரம், தியாகதுருகம் சாலை ஆகியவை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும், முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல் விளக்குகளும் செயல்படாமல் பல ஆண்டுகளாக காட்சி பொருளாகவே உள்ளது.

நகரின் முக்கிய பகுதியான நான்கு முனை சந்திப்பு மிகவும் குறுகலானதாக இருந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பகுதியில் அரசு பெண்கள் பள்ளியின் மதில் சுவர் உடைக்கப்பட்டு, மின்சார டிரான்ஸ்பார்மர்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.ஆனால், அந்த இடம் தற்போது எவ்வித உபயோகமும் இல்லாமல், வாகன நிறுத்தமாகவும், தற்காலிக முகாம்கள் நடத்தும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. விரிவுபடுத்தப்பட்ட இடத்தில் தார் போட்டு சாலை விஸ்தரிப்பு கூட செய்யாமல் விடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் பிரச்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நகரம் இன்னும் மீளாமல் உள்ளது.

அதுமட்டுமின்றி கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, கள்ளக்குறிச்சி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement