dinamalar telegram
Advertisement

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு: பியுஷ் கோயல் கோரிக்கை

Share
Tamil News
புதுடில்லி: நாட்டில் உள்ள, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலிருந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கவனம் செலுத்த வேண்டும் என, உலகளவிலான துணிகர முதலீட்டு நிறுவனங்களை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று, உலக துணிகர முதலீட்டு நிறுவனங்களுடனான சந்திப்பின் போது, அமைச்சர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்டார்ட் நிறுவனங்களை ஆதரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்திருப்பதாகவும், மேலும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், துணிகர முதலீட்டு நிறுவனங்கள், புதிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் வாயிலாக, இளம் இந்திய தொழில்முனைவோர்களின் அறிவுசார் சொத்துக்களை பாதுக்காக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில், கிட்டத்தட்ட 61 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இதில், 45 நிறுவனங்கள் ௨ம் மற்றும் ௩ம் நிலை நகரங்களிலிருந்து துவங்கப்பட்டவையாகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எளிதாக தொழில் துவங்கும் வகையில், இதுவரை கிட்டத்தட்ட 49 ஒழுங்குமுறை சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement