dinamalar telegram
Advertisement

உயிர் பறிக்கும் குழிகள்: லாரி மோதி சிறுவன் பலி

Share
அன்னுார்: கோவை, தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார், 30. இவர், நேற்று மாலை, மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன், புளியம்பட்டியில் இருந்து தென்னம்பாளையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அன்னுார் நகரில், சத்தி ரோடு -அவிநாசி ரோடு சந்திப்பில், கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து மைசூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது.இதில் பைக்கில் வந்த சிறுவன் அஸ்வின், 3, கீழே விழுந்து லாரி மோதி இறந்தார். சிவகுமார் உள்பட மற்ற மூவர் காயமின்றி தப்பினர். அன்னுார் போலீசார், லாரி டிரைவர் குண்டல்பேட்டை, மகாதேவ சுவாமி, 24 மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அன்னுார் நகரில், குழாய் பதித்த குழிகள் சரியாக மூடப்படாததால், இதுவரை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement