dinamalar telegram
Advertisement

பிரமேந்திரர் கோவில் சாலையில் சுகாதார சீர்கேட்டால் முகம் சுளிப்பு

Share
கரூர்: கரூர் அருகே, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையில், ஏராளமானோர் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். குப்பை கழிவுகளை போட தொட்டி வைக்காததால், சாலையில் வீசிச்செல்கின்றனர். மேலும், உடனுக்குடன் அள்ளாததால் மலைபோல் தேங்கி, சாலையில் பறந்த வண்ணம் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கடந்துசெல்லும்போது, முகம் சுளித்தபடி செல்கின்றனர். எனவே, சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையில், குப்பை தொட்டி வைத்து, கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement