dinamalar telegram
Advertisement

ஹாட்ஸ்பாட் ஆனது அன்னூர்: ஒரே நாளில் 40 பேருக்கு தொற்று

Share
அன்னுார்: அன்னுாரில் நேற்று ஒரே நாளில், 40 பேருக்கு தொற்று உறுதியானது.

அன்னுார் வட்டாரத்தில், ஒட்டர்பாளையம், கஞ்சப்பள்ளி, கணேசபுரம், பசூர், எல்லப்பாளையம் மற்றும் பேரூராட்சி பகுதியில், நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு தொற்று உறுதியானது. இருவர் தனியார் மருத்துவமனைக்கும், இருவர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் உரிய அறிவுரையுடன் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், இடிகரை பேரூராட்சியில் 5 பேருக்கு, வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் 5 பேருக்கு, அத்திப்பாளையம், கொண்டையம்பாளையம், வெள்ளமடை, ஊராட்சிகளில் தலா இருவருக்கு, கீரணத்தம் ஊராட்சியில் மூவருக்கு என 21 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. அன்னுார் தாலுகாவில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று உறுதியானது. அன்னுார் தாலுகாவில் கடந்த ஆறு மாதங்களில் இதுதான் அதிகபட்ச தொற்று பாதிப்பாகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement