பைக் - கார் மோதல்: இருவர் படுகாயம்
குளித்தலை: திருச்சி மாவட்டம், முசிறி அருகே, சந்தைபாளையத்தை சேர்ந்த நல்லேந்திரன் மகன் சரவணன், 27. இவர், கடந்த, 11 அதிகாலை, தனது சித்தி செல்வி, 35, என்பவருடன் டூவீலரில் மேட்டுமருதூர், 4 ரோடு அருகே வந்தபோது, எதிரே, திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த ஜெகதீசன் மகன் தீனதயாளன், 39, என்பவர் ஓட்டிவந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டூவீலரில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, சரவணன் கொடுத்த புகார் படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!