dinamalar telegram
Advertisement

மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து

Share
கரூர்: மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, நேற்று காலை, வினாடிக்கு, 11 ஆயிரம் கனஅடியை தாண்டியது.
மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்காக கடந்த, 10 முதல் வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, கடந்த ஐந்து நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, மாயனூர் கதவணைக்கு, 10 ஆயிரத்து, 952 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 11 ஆயிரத்து, 496 கனஅடியாக அதிகரித்தது. சம்பா சாகுபடிக்காக, 10 ஆயிரத்து, 926 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 570 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 178 கனஅடியாக இருந்தது. அமராவதி ஆற்றில், 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 87.41 அடியாக இருந்தது.

ஆத்துப்பாளையம் அணை: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, 6 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 24.07 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நங்காஞ்சி அணை: நங்காஞ்சி அணை நிரம்பியதால், ஆற்றில், 10 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. அணைக்கு, 60 கனஅடி தண்ணீர் வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement