dinamalar telegram
Advertisement

இன்று மாட்டு பொங்கல்: களை கட்டிய கயிறு விற்பனை

Share
கரூர்: இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, கயிறு, சதங்கை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களை கட்டியது. தமிழகத்தில் தை பிறப்பில் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று, சூரியனுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டன. இன்று, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டு பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக கால்நடைகளை வளர்ப்போர், கட்டுவதற்கான கயிறு, சதங்கைகள், கலர் பொடிகள், மூக்கணாங்கயிறு உள்ளிட்டவைகளை நேற்று வாங்கினர். கரூர், ஜவஹர் பஜாரில் கயிறு விற்பனை களை கட்டியது. 10 முதல், 1,500 ரூபாய் வரையிலான கயிறு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கரூர் நகர்ப்புறத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து, கயிறுகளை வாங்கி சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement