dinamalar telegram
Advertisement

கரூர் மாவட்டத்தில் நேற்று 74 பேருக்கு கொரோனா

Share
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்தில் நேற்று வரை, 25 ஆயிரத்து, 372 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 24 ஆயிரத்து, 703 பேர் சிகிச்சைக்கு பின், பூரண நலம் பெற்று வீடு திரும்பினர். நேற்று, 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். தற்போது, 302 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று, கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை, 367 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement