dinamalar telegram
Advertisement

புகையிலை விற்பனை: போலீசார் அதிரடி

Share
கரூர்: கரூர் மாவட்டத்தில், புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர். 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா என, நேற்று முன்தினம் குளித்தலை, வெள்ளியணை, கரூர் டவுன், பசுபதிபாளையம், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், வாங்கல் மற்றும் லாலாப்பேட்டை ஆகிய போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது, குளித்தலை அடுத்த, தரகம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த குழந்தைவேல், 55, சுக்காம்பட்டி மாணிக்கம் மகன் கனகரத்தினம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement