dinamalar telegram
Advertisement

லாரி மோதி ஏ.டி.எம்., காவலாளி உயிரிழப்பு

Share
எருமப்பட்டி: நாமக்கல் - திருச்சி சாலையில், மேட்டுப்பட்டி அருகே லாரி மோதி காவலாளி உயிரிழந்தார். எருமப்பட்டி அருகே மேய்க்கல்நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்நாதன், 41. இவர், வளையப்பட்டியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் இருந்து, வேலைக்கு செல்ல இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பட்டி அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்நாதன் இறந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement