dinamalar telegram
Advertisement

பா.ஜ., கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

Share
ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், ராசிபுரம் பழைய பஸ் நிலையம் ரவுண்டானா அருகே, பஞ்சாப் காங்., அரசின் மீது பழி சுமத்தும் பிரதமரை கண்டித்து நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பஞ்சாபில் கூட்டம் கூடவில்லை என்பதற்காக, காங்கிரஸ் மீது பழி சுமத்தும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷம் எழுப்பினர். ராசிபுரம் வட்டார காங்.,தலைவர் கணேசன், வெண்ணந்தூர் வட்டார தலைவர் ஜெகநாதன், வெண்ணந்தூர் பேரூர் தலைவர் சிங்காரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர காங்., கமிட்டி தலைவர் முரளி ஸ்ரீராமுலு நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement