dinamalar telegram
Advertisement

தொழிலாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை

Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில், விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். தற்போது பொங்கலுக்கு ஒரு வராம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என, வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தீபாவளிக்கு பிறகு, தொழில் எதிர்பார்த்தளவு இல்லை. விற்பனை மந்தம், உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து உற்பத்தி நடந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு வேலையும் கொடுத்து வருகிறோம். வழக்கமாக பண்டிகை காலத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். தற்போது தொழில் உள்ள சூழ்நிலை கருதி, பொங்கலுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement