dinamalar telegram
Advertisement

யானைகள் முகாமில் பொங்கல் விழா: வளர்ப்பு யானைகள் பங்கேற்பு

Share
Tamil News
கூடலூர்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், வளர்ப்பு யானைகள் பங்கேற்ற பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபாயரணயம் யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல பண்டிகைக்கு அடுத்த நாள் இம்முகாம்களில் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று, மாலை யானைகள் முகாமில் நடந்தது. முன்னதாக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து, அலங்கரித்து வரிசையில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து விநாயகர் கோவிலில் பூஜை செய்து, யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன், சிறப்பு உணவுகள் வழங்கினார். விழாவில் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement